ஏலக்காய் கடத்தி சென்ற 3 ஜீப்புகள் பறிமுதல்
கேரளாவில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் ஏலக்காய் கடத்தி சென்ற 3 ஜீப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
போடி:
கேரளாவில் இருந்து போடிமெட்டு மலைப்பாதை வழியாக ஏலக்காய் கடத்தி செல்வதாக போடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போடிமெட்டு சோதனை சாவடியில் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்த 3 ஜீப்புகள் வந்தன.
அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். மூட்டைகளில் 1500 கிலோ ஏலக்காய்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. ஜீப்பில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், போடிமெட்டை சேர்ந்த அழகர்ராஜா (வயது 29), மகஷே் (38), கோபிநாத் (38) என்பது தெரியவந்தது. உடனே அந்த 3 ஜீப்புகள், ஏலக்காய்களை போலீசார் பறிமுதல் செய்து வணிக வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கேரளாவில் இருந்து ஏலக்காய் கொண்டு வந்ததற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அவர்களுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதத்தை அதிகாரிகள் விதித்தனர்.
Related Tags :
Next Story