மு.க.ஸ்டாலின் தமிழகத்தை தலைநிமிர செய்து உள்ளார். அமைச்சர் துரைமுருகன் பேச்சு
‘6 மாதகால ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை தலைநிமிர செய்து உள்ளார்’ என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலூர்
‘6 மாதகால ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை தலைநிமிர செய்து உள்ளார்’ என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
அமைச்சர் துரைமுருகன் பேச்சு
வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்ட தொடக்க விழாவிற்கு நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சரான பின்னர் முதல் முறையாக வேலூருக்கு மு.க.ஸ்டாலின் வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நல்லதொரு ஆட்சியில் நாடு செழிக்கிறது. பாலாற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 மாத கால ஆட்சியில் தமிழகத்தை தலை நிமிர செய்துள்ளார். அரசு திட்டங்களை தீட்டுவதில் முடிவுகள் எடுப்பதில் மற்ற மாநில முதல்-அமைச்சர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறார்.
மராட்டிய மாநில முதல்-மந்திரி, இருந்தால் மு.க.ஸ்டாலின் போல் இருக்க வேண்டும் என்கிறார். கேரளாவில் ஒரு அமைச்சர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள், செயல்பாடுகளை புகழ்ந்து பேசுகிறார். 6 மாத கால ஆட்சியில் எந்த தவறையும் சுட்டிக்காட்ட முடியாதபடி மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார். அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
மக்களை தேடிச்சென்று உதவி
பல்வேறு திட்டங்களை தீட்டுவது, தொழிற்சாலைகள், விவசாயிகள், வேளாண்மை போன்றவற்றை பார்ப்பது மட்டுமல்ல வறுமையால் வாடும் ஏழை மக்களை தேடிச்சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உதவி செய்து வருகிறார்.
தொப்புள் கொடி உறவுகளான இலங்கை தமிழர்கள் நாடற்றவர்களாக சொத்து சுகத்தை இழந்து தமிழகத்திற்கு வந்துள்ளார்கள்.
அண்ணா காலத்தில் இருந்து இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க. குரல் கொடுத்து வருகிறது.
கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது இலங்கை தமிழர்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டன. தற்போது அவர்கள் அகதிகள் அல்ல. நம் உறவுகள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுபெயர் சூட்டி உள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள்
இலங்கை தமிழர்கள் அவர்களுக்காக கோரிக்கை வைப்பது இல்லை. ஓட்டு போடுபவர்களுக்கு மட்டுமே சேவை செய்வார்கள். நமக்கு யார் செய்வார்கள்?, நம்மை யார் காப்பாற்றுவார்கள்? என்று ஏங்கி கிடந்த இதயத்தை வருடி நானிருக்கிறேன் என்று முதல்-அமைச்சர் கூறுகிறார். மு.க. ஸ்டாலினை இலங்கை தமிழர்கள் கடவுளாக பார்க்கிறார்கள். உங்களுக்கு அனைத்து உரிமைகளையும் தர தயாராக இருக்கிறோம். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு அடிக்கடி வர வேண்டும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் வந்த நேரம் வேலூர் மாவட்டத்தில் ஏரிக்கரை எல்லாம் நிரம்பி வழிகிறது. வேலூரில் நாங்கள் தஞ்சையை பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story