தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
தண்ணீர் இல்லாத சுகாதார வளாகம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் கூனவேலம்பட்டி ஊராட்சி பாலப்பாளையம் ரேஷன் கடை பின்புறம் உள்ள சுகாதார வளாகத்தில் 6 மாதமாக தண்ணீர் வசதி இல்லை. இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்த பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வீட்டில் இருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து கழிப்பிடத்தை பயன்படுத்துகின்றனர். எனவே அதிகாரிகள் சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும்.
-ஊர் பொதுமக்கள், பாலப்பாளையம், நாமக்கல்.
மேம்பாலத்தில் தேங்கும் மழைநீர்
தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன. இந்த மேம்பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழை நீர் தொடர்ந்து தேங்கினால் பாலத்தின் மைய பகுதியில் உறுதித்தன்மை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே அந்தப் பகுதியில் மழைநீர் தேங்காமல் வடிந்து ஓடுவதற்கான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
-ராஜேஷ், தர்மபுரி.
வாகனங்களால் இடையூறு
சேலம் 5 ரோடு முதல் ஜங்ஷன் ஏ.வி.ஆர். ரவுண்டானாவில் இருந்து சாஸ்தா நகர், குரங்குசாவடி பஸ் நிறுத்தம் வரை ரோட்டில் எப்போதும் கார், டாக்ஸி மற்றும் சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் நடந்து செல்வோர் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமத்துடன் செல்லவேண்டிய உள்ளது. அதனால் நிறுத்தி வைக்கும் வாகனங்களை ஓரமாக நிறுத்தவும் அதே சமயத்தில் விபத்து நடக்காத வகையில் சீர் செய்ய தகுந்த நடவடிக்கை செய்யவேண்டும்.
-மோகன், சேலம்.
Related Tags :
Next Story