இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
இளையான்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெண்ணிடம் நகை பறிப்பு
இளையான்குடி அருகே உள்ள ஓடைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ்ராஜா. இவருடைய மனைவி குயின்ஷீலா(வயது 39). இவர் தனது மகன் டார்வின் சிமி(8) ஆகியோருடன் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் தாயமங்கலத்துக்கு சென்று உள்ளார். அப்போது தாயமங்கலம் அருகே சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள், இவரது இருசக்கர வாகனம் அருகே வந்தனர்.
திடீரென்று அதில் ஒரு ஆசாமி குயின்ஷீலா அணிந்திருந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். திடீரென்று நகையை ஆசாமிகள் பறித்ததால் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில் அவரது கையில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. அவரது மகன் காயமின்றி தப்பினான்.
போலீசில் புகார்
காயம் அடைந்த குயின்ஷீலா சிகிச்சைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது குறித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் சம்பந்தப்பட்ட திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story