பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்
பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்
வாலாஜா
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நிலையில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு மீண்டும் அமல்படுத்த கோரியும் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் வாலாஜாப்பேட்டையில் காந்தி சிலை அருகே சாலை மறியல் நடந்தது. நகர செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சுரேந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில வன்னியர் சங்க செயலாளர் எம்.கே.முரளி, முன்னாள் துணை பொது செயலாளர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், மாவட்ட செயலாளர்கள் நல்லூர் சண்முகம், அ.ம.கிருஷ்ணன், பா.ம.க. மாநில துணை அமைப்பு செயலாளர் தங்கதுரை, ஒன்றிய செயலாளர்கள் சக்ரவர்த்தி, கன்னிகாபுரம் ரவி உள்பட மாவட்ட, நகர,, ஒன்றிய,, பேரூர் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story