பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது


பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
x
தினத்தந்தி 2 Nov 2021 11:33 PM IST (Updated: 2 Nov 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவருடைய தந்தையையும், பூசாரியையும் போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்,

பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவருடைய தந்தையையும், பூசாரியையும் போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பிளஸ்-1 படித்து வந்தார். இவருடைய தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் வந்து பூ கட்டும் வேலையும், கொத்தனார் வேலையும் பார்த்து வந்தார். இவரது தாயும் பூகட்டும் வேலைக்கு சென்று வந்துள்ளார். 
இந்நிலையில் சிறுமிக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியும் உள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி சரிவர சாப்பிடாமல் படிக்காமலும் இருந்துள்ளார். 
அவரது தாயார், சிறுமியை டாக்டரிடம் காண்பித்தும் குணமாகாததால், ராமநாதபுரம் அருகே சூரங்கோட்டை கொட்டகை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 47) என்ற பூசாரியிடம் அழைத்து சென்றுள்ளார். 

பூசாரியும் தொல்லை
அவர் சிறுமிக்கு பரிகாரம் செய்தால் சரியாகி விடும் எனக்கூறி ரூ.30 ஆயிரம் வாங்கி இருக்கிறார். ஊர் சுடுகாட்டின் அருேக கூரை கொட்டகை அமைத்து அந்த சிறுமியை வரவழைத்துள்ளார். சிறுமியின் தாய், உறவினர்களை வெளியே காக்க வைத்து விட்டு அவர்களது செல்போன்களையும் பூசாரி பறித்து கொண்டு கூரை கொட்டகைக்குள் சிறுமியை பூஜை செய்வதாக அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பால் கொடுத்ததாகவும்,. அந்த பாலை குடித்தபின் அந்த சிறுமி மயங்கி விழுந்ததாகவும், அதன் பிறகு அந்த சிறுமியிடம் பூசாரி சிவக்குமார் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு வீடு திரும்பிய அந்த சிறுமிக்கு மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

2 பேர் கைது
ஒருகட்டத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை தாங்க முடியாமல் சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியை அழைத்து வந்து விசாரித்தனர்.  விசாரணையில் தந்தையும், பூசாரியும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து பூசாரி சிவக்குமாரையும், சிறுமியின் தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story