அரசு பஸ் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்தது: டிரைவரின் சாதுரியத்தால்60 பயணிகள் உயிர் தப்பினர்


அரசு பஸ் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்தது: டிரைவரின் சாதுரியத்தால்60 பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 3 Nov 2021 12:08 AM IST (Updated: 3 Nov 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே இரங்கம்மாள் சத்திரத்தில் அரசு பஸ் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்தது. டிரைவரின் சாதுரியத்தால் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் உயர் தப்பினர்.

அன்னவாசல்:
பயணிகள் உயிர் தப்பினர்
திருச்சியிலிருந்து 60-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று அறந்தாங்கி நோக்கி அரசு பஸ் ஒன்று திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை அருகே இரங்கம்மாள்சத்திரம் என்ற இடத்தில் வந்த போது எதிர்பாராதவிதமாக பஸ்சில் முன் பக்க டயர் வெடித்ததால் பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து பஸ் டிரைவர் தமிழ்மாறன் சாதுரியமாக செயல்பட்டு சாலையின் நடுவே நிறுத்தினார். இதனால் பஸ்சில் பயணித்த 60-க்கும் மேற்பட்ட பயணிகள் நிம்மதி பெருமூச்சுடன் உயிர் தப்பினர். மேலும் சாதுரியமாக செயல்பட்ட டிரைவர் தமிழ்மாறனுக்கு பயணிகள் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தனர். 
கோரிக்கை 
இதனையடுத்து சாலையில் நின்ற பயணிகளை கண்டக்டர் அடுத்தடுத்து வந்த பஸ்களில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசு பஸ்களை முறையாக பராமரித்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story