கீரனூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து7 பவுன் நகை-ரூ.90 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


கீரனூர் அருகே  விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து7 பவுன் நகை-ரூ.90 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Nov 2021 12:24 AM IST (Updated: 3 Nov 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

கீரனூர் அருகே விவசாயின் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.90 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கீரனூர்:
நகை திருட்டு 
கீரனூர் அருகே குன்றாண்டார்கோவில் அடுத்தவத்தனாக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் தேரடியான் (வயது 47). விவசாயி. நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள மற்றொரு வீட்டில் மனைவி குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தனர். மறுநாள் காலையில் தேரடியான் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைடுத்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 7 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு மற்றும் ரூ.90 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடையாளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story