கல்லறை திருநாள் கடைபிடிப்பு


கல்லறை திருநாள் கடைபிடிப்பு
x
தினத்தந்தி 3 Nov 2021 12:25 AM IST (Updated: 3 Nov 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது

அரியலூர்
கிறிஸ்தவ வழக்கப்படி மரித்தவர்கள் கல்லறை தோட்டங்களில் அடக்கம் செய்யப்படுகிறார்கள். அவர்களை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி அரியலூர் மற்றும் மாவட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் நேற்று கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது.
 இதனை முன்னிட்டு இறந்த உறவினர்கள், முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் பிடித்தமானவற்றை படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் நேற்று ஜபம் செய்தனர். அரியலூரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் ஒரு சில கல்லறைகளில் மழைநீர் தேங்கியது. இருந்தபோதும் கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்திற்கு வருகை தந்து நீரில் இறங்கி தங்களது முன்னோர்களை நினைவுகூர்ந்து ஜெபம் செய்தனர். மாலை இறந்தோருக்கான திருப்பலி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்
 இதேபோல ஆண்டிமடம், வரதராஜன்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் மறைந்த உறவினர்களின் கல்லறைக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்தனர்.கல்லறை திருநாளை முன்னிட்டு வரதராஜன்பேட்டை அலங்காரஅன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை பெலிக்ஸ் சாமுவேல், தென்னூர் அன்னை லூர்து ஆலயத்தில் மரியநல்லூஸ் ராஜா மற்றும் வரதராஜன்பேட்டை, தென்னூர் அன்னைலூர்து மற்றும் ஆண்டிமடம், பட்டனகுறிச்சி, கூவத்தூர், அகினேஸ்புரம், கீழ்நெடுவாய், நெட்டலக்குறிச்சி ஆகிய ஆலயங்களில் அந்தந்த பங்குத் தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நிைறவேற்றப்பட்டது.


Next Story