போலி ஆவணம் மூலம் நில மோசடி புகாரில் தம்பதி மீது வழக்குப்பதிவு


போலி ஆவணம் மூலம் நில மோசடி புகாரில் தம்பதி மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 3 Nov 2021 12:27 AM IST (Updated: 3 Nov 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணம் மூலம் நில மோசடி புகாரில் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கீழணை பகுதியை சேர்ந்த படிகாசுவின் மனைவி சாலி (வயது58). இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் 30 சென்ட் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அதே பகுதியை சேர்ந்த சேது, அவரது மனைவி தனபாக்கியம் பெயருக்கு தானமாக எழுதிகொடுத்து மோசடி செய்ததாக புதுக்கோட்டை நில அபகரிப்பு போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். அதன்பேரில் கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story