ஆம்புலன்ஸ் மீது கல்வீசிய 2 வாலிபர்கள் கைது

திருச்சி, நவ.3-
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 32). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 31-ந்தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய உடல் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், சாந்தகுமாரின் உடல் உறவினர்களிடம் நேற்று முன்தினம் மாலை ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாந்தகுமாரின் உடலை, அவரது சொந்த ஊரான லால்குடிக்கு இலவச ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு உறவினர்கள் புறப்பட்டனர். கோர்ட்டு வளாகம் பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே ஆம்புலன்ஸ் வந்த போது, 2 பேர் ஆம்புலன்ஸ் மீது கல்வீசி மறித்ததுடன், ஆம்புலன்ஸ் டிரைவர் சதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்புலன்ஸ் மீது கல்வீசி தாக்கிய உறையூரை சேர்ந்த முத்துக்குமார் (27), நிதீஷ்குமார் (23) ஆகியோரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story