சாலையில் நாற்று நட்டு போராட்டம்


சாலையில் நாற்று நட்டு போராட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2021 12:40 AM IST (Updated: 3 Nov 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பில் சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பில் சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தொடர்மழை 
வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி ஊராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட காளியம்மன் கோவில் தெருவில்  300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சரியான சாலை வசதி இல்லை. 
இப்பகுதியில் உள்ள சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் இப்பகுதியில் சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். 
நாற்றுநட்டு போராட்டம் 
மேலும் மழைநீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் கொசு உற்பத்தி ஆகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. 
எனவே சாலை வசதி செய்து தர வலியுறுத்தி தேங்கிக் கிடக்கும் மழைநீரில் நாற்றுநட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேதமடைந்த சாலையை விரைவில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story