தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Nov 2021 12:41 AM IST (Updated: 3 Nov 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
காட்சிப்பொருளான சுகாதார வளாகம்
தேனி அரண்மனைபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட சத்தியநாதபுரத்தில் புதிதாக பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அது கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாததால், புதர்மண்டி கிடக்கிறது. எனவே காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும். 
-சீனிராஜ், அரண்மனைப்புதூர்.
காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
ஆத்தூர் அருகே உள்ள பிரவான்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. அவை விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரமேஷ்குமார், பிரவான்பட்டி.
மின்கம்பம் மாற்றப்படுமா?
திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு கருமாரியம்மன் கோவில் அருகே மின்கம்பம் ஒன்று சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் சம்பவம் நடைபெறும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேகரன், பள்ளப்பட்டி.
சாக்கடை கால்வாய் சேதம்
ஆண்டிப்பட்டியில், தேனி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று  அமைந்துள்ளது. இந்த வங்கி முன்பு சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த சாக்கடை கால்வாய் சேதமடைந்து காணப்படுவதுடன், அதன் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகளும் சேதமடைந்துள்ளது. எனவே சேதமடைந்த சாக்கடை கால்வாய் மற்றும் சிலாப்புகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-கோபாலகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி.

Next Story