ராஜபாளையத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்
ராஜபாளையத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தை சேர்ந்த மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மதுரை ஆதீனம் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் மதுரை சாலை, நேரு சிலை, பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, தென்காசி சாலை, எல்.ஐ.சி. அலுவலகம், ஸ்டேட் வங்கி, சங்கரன் கோவில் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து செல்லப்பட்டு, புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியாதிகுளம் கண்மாயில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story