பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 3 Nov 2021 12:55 AM IST (Updated: 3 Nov 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் பெண்ணிடம் நகை பறித்த சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அருப்புகோட்டை, 
அருப்புக்கோட்டை செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி ராஜலட்சுமி (வயது 41). அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராஜலட்சுமி சம்பவத்தன்று இரவு பஜாரில் டி.வி. வாங்குவதற்காக கடைக்கு சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் ராஜலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. உடனே ராஜலட்சுமி சத்தம் போட்டார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து  ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story