சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாடு


சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 3 Nov 2021 12:58 AM IST (Updated: 3 Nov 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடந்தது.

வத்திராயிருப்பு,
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடந்தது. 
சிறப்பு அபிேஷகம் 
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், 2 பிரதோஷத்திற்கு தலா ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்தநிலையில் மழையின் காரணமாக சதுரகிரி கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 
இதனால் ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி  நேற்று பக்தர்கள் இன்றி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சாமி தரிசனம் 
 பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர். 
சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story