மினி லாரி மோதி பசுமாடு- கன்றுக்குட்டி செத்தன


மினி லாரி மோதி பசுமாடு- கன்றுக்குட்டி செத்தன
x
தினத்தந்தி 3 Nov 2021 1:06 AM IST (Updated: 3 Nov 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

மினி லாரி மோதி பசுமாடு- கன்றுக்குட்டி செத்தன

கொள்ளிடம் டோல்கேட், நவ.3-
திருச்சி நம்பர் 1 டோல்கேட்டை அடுத்த பழூர் அருகே உள்ள வயல்வெளி பகுதியில் மேய்ந்து விட்டு பசுமாடு, அதன் கன்றுக்குட்டியுடன் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது திருச்சியில் இருந்து காலி பாட்டில்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரி அவைகள் மீது மோதியது. இதில் பசுமாடும், கன்றுக்குட்டியும் சம்பவ இடத்திலேயே செத்தன. இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை.

Next Story