ஊர்க்காவல் படை வீரர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் அறிவுரை
ஊர்க்காவல் படை வீரர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் அறிவுரை வழங்கினார்.
சேலம்,
கலந்தாய்வு கூட்டம்
சேலம் மாவட்ட ஊர்க்காவல் படை வீரர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று சேலம் வின்சென்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இதற்கு ஊர்க்காவல் படை மாவட்ட கமாண்டர் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை கமாண்டர் தீக்ஷிதா, ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார், ஊர்க்காவல் படை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்க்காவல் படையினரும் சிறப்பாக பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது. காக்கி சட்டை அணிந்துள்ள ஊர்க்காவல் படையினருக்கு போலீஸ் குடும்பத்துடன் சேர்ந்து உள்ளோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும். தவறானவர்களை நல்லவர்களாக மாற்ற வேண்டும்.
சட்டவிரோத செயல்கள்
ஊர்க்காவல் படை வீரர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது. ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கிடைக்கும் தகவல்களை போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்து சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் நேரடியாக என்னிடமே தெரிவிக்கலாம். ஊர்க்காவல் படை வீரர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். சம்பள பிரச்சினை பற்றி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. தேவையான உதவிகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பணியாற்றி வரும் 330 ஊர்க்காவல் படையினருக்கு தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு மற்றும் சிறப்பு பரிசுகளை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் வழங்கினார்.
Related Tags :
Next Story