தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
வடிகால் ஓடை தேவை
கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வைகுண்டப்பதி ஊர் மருந்துவாழ்மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரின் நடுவே அமைந்துள்ள தெருவில்150 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த தெருவில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிகால் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.பால்துரை, வைகுண்டப்பதி.
சாலையை சீரமைக்க வேண்டும்
கன்னியாங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புளியடி பகுதியில் இருந்து வடசேரி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. கிராமத்தில் இருந்து சிகிச்சைக்காக வாகனத்தில் செல்லும் கர்ப்பிணிகள், முதியோர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆஸ்டின், புளியடி.
ஒலி பெருக்கியால் அவதி
காட்டுப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கோவில்கள், ஆலயங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்ைற அதிக சத்தத்துடன் நேரக்கட்டுப்பாடின்றி பயன்படுத்துவதால் முதியோர்கள், நோயாளிகள், பள்ளி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திலகராஜ், காட்டுப்புதூர்.
விபத்து அபாயம்
அயக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட கல்லடிமாமூட்டில் இருந்து அண்டூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மண்விளை பகுதியில் தற்போது பெய்த மழையால் சாலையில மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வரும் வாகனங்கள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஜஸ்டின் ஜாஸ்ப்பர், மண்விளை.
தொற்று நோய் பரவும் அபாயம்
விலவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாமிவிளை, கடமலைக்குன்று பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அந்த பகுதியில் உள்ள மழைநீர் ஓடை வழியாக செல்கிறது. அவை சாமிவிளையில் ஒரு பகுதியில் வந்து தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
-ஜெகன், சாமிவிளை.
பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெருக்கடி
திங்கள்நகர் பஸ்நிலையத்துக்குள் ஒரு பகுதியில் சிலர் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி உள்ளனர். அவ்வாறு வரும் கார்கள் மிக வேகமாக வருகிறது. இதனால், பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த வாகனங்களால் சில நேரங்களில் பஸ் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்துக்கு வேறு வாகனங்கள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், திங்கள்சந்தை.
Related Tags :
Next Story