கொட்டும் மழையில் பொதுமக்கள் மறியல்
சாலைைய சீரமைக்க கேரி கொட்டும் மழையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அழகியமண்டபம்.
சாலைைய சீரமைக்க கேரி கொட்டும் மழையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சேதமடைந்த சாலை
வில்லுக்குறியில் இருந்து கொன்னக்குழிவிளை, பரசேரி, ஆளூர், தோப்பூர் வழியாக ஆசாரிபள்ளம் செல்லும் சாலை சேதம் அடைந்து பஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை. இதனால் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் பள்ளி மற்றும் கல்லூரி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே சாலையை உடனே சீரமைக்க கோரி நேற்று மாலை மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து தலைமையில் வில்லுக்குறியில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் கொன்னக்குழிவிளை ஊர் மக்கள், பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் மகளிர் மன்றத்தினர் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஜெயசிங், அருள்ராய், ரமேஷ் வர்கீஸ், கவுன்சிலர் சுதா, மகளிர் மன்ற நிர்வாகிகள் பிரிட்ஜில, பாத்திமா, புனிதா, அமலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்து ஒரு வாரத்துக்குள் சாலையை சீர் செய்யப்படும் என போலீசார் கூறினார்கள். அதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story