6 கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது
6 கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது
சோளிங்கர்
தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருவதால் பல்வேறு ஏரிகள் நிரம்பி வருகிறது. இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக சோளிங்கர் அருகே கொடைக்கல் பகுதியில் இருந்து தலைவாய்பட்டடை கிராமத்துக்கு செல்லக்கூடிய சாலை ஓரத்தில் உள்ள தடுப்பணை கால்வாயில் அதிகளவில் நீர் சென்றது. இதன் காரணமாக வெள்ளிமேடு, தளவாய்பட்டடை, கேசவனாகுப்பம், எஸ்.ஆர்.கண்டிகை, புதூர், மருதாலம் கூட்டுசாலை உள்ளிட்ட 6 கிராமங்களை இணைக்கக்கூடிய தார்சாலையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டு சுமார் 8 அடி அளவிற்கு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சோளிங்கர் ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை கொண்டு சாலையை பலப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓரிரு நாட்களில் மணல் மூட்டைகளை கொண்டு சாலையை பலப்படுத்தும் பணியில் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தகுமார், கொடைக்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமச்சந்திரன், துணைத்தலைவர் ஜெயஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story