72 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
72 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
வேலூர்
வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். இயன்முறை பயிற்சியாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார்.
இதில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 223 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
அவர்களை கண், காது, எலும்பு, மனநலம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ துறைகளை சேர்ந்த டாக்டர்கள் பிரவீன்குமார், சதீஷ்குமார், சிவாஜிராவ், முத்து, கிரிதரண், கீர்த்தரண், அரிபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர்.
முகாமில் தகுதியுடைய 72 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன. மேலும் 21 பேரை மறுமதிப்பீடு செய்து அவர்களுக்கு ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. சிறப்பு முகாமில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று மாற்றுத்திறனாளி நலஅலுவலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story