சென்னை புறநகரில் தொடர் மழை எதிரொலி: 6 பன்னாட்டு விமானங்கள் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டன


சென்னை புறநகரில் தொடர் மழை எதிரொலி: 6 பன்னாட்டு விமானங்கள் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டன
x
தினத்தந்தி 3 Nov 2021 9:14 AM IST (Updated: 3 Nov 2021 9:14 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புறநகரில் தொடர் மழை எதிரொலியாக 6 பன்னாட்டு விமானங்கள் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

ஆலந்தூர்,

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பன்னாட்டு விமான சேவைகளில் புறப்பாடு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இதனால் சென்னையில் இருந்து 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய பாங்காக் செல்லும் விமானம் அதிகாலை 3.19 மணிக்கும், குவைத்திற்கு அதிகாலை 2.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் அதிகாலை 3.58 மணிக்கும், சாா்ஜாவிற்கு அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் அதிகாலை 3.56 மணிக்கும் புறப்பட்டு சென்றது.

மேலும், சாா்ஜாவிற்கு அதிகாலை 3.40 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் காலை 6.11 மணி அளவிலும், லண்டனுக்கு காலை 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் காலை 8.16 மணிக்கும், அபுதாபிக்கு காலை 8.25 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் காலை 9.26 மணிக்கும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இந்த 6 விமானங்களும் 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகளில் பாதிப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story