திருவொற்றியூரில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற 5 பேர் கைது


திருவொற்றியூரில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2021 9:17 AM IST (Updated: 3 Nov 2021 9:17 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத்திற்கு தகவல் வந்தது. 

இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் போதை மாத்திரைகள் விற்கும் கும்பலை பிடிக்க திருவொற்றியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக திருவொற்றியூர் மேட்டு தெருவைச் சேர்ந்த சூர்யா (வயது 24) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சிவகுமார் (28), கிருஷ்ணன் (35), மண்ணடியை சேர்ந்த முகமது யாகியா (52), பெருங்களத்தூரை சேர்ந்த தமீம் அன்சாரி (42) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 7 கிராம் ‘மெத்தாபெட்டைமைன்’ மற்றும் 350 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், இவர்கள் 5 பேரும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story