சிவசங்கர் பாபாவுக்கு 16-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு - 5 வழக்குகளில் 4-ல் ஜாமீன் பெற்றார்


சிவசங்கர் பாபாவுக்கு 16-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு - 5 வழக்குகளில் 4-ல் ஜாமீன் பெற்றார்
x
தினத்தந்தி 3 Nov 2021 9:28 AM IST (Updated: 3 Nov 2021 9:28 AM IST)
t-max-icont-min-icon

சிவசங்கர் பாபாவுக்கு இந்த மாதம் 16-ந்தேதி வரை காவலை நீட்டித்து செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து அவர் மீது போக்சோ வழக்கு உள்பட 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில், சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது சிவசங்கர் பாபாவுக்கு இந்த மாதம் 16-ந்தேதி வரை காவலை நீட்டித்து செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெண்களை மானபங்கம் செய்ததாக சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட 2 வழக்குகளில் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. சிவசங்கர் பாபா மீது உள்ள 3 போக்சோ வழக்கில் ஏற்கனவே 2 வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Next Story