பேரியத்தை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை


பேரியத்தை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Nov 2021 11:48 AM IST (Updated: 3 Nov 2021 11:48 AM IST)
t-max-icont-min-icon

பேரியத்தை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி பேரியத்தை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட சரவெடி சார்ந்த பட்டாசுகள் உடல் நலம் மற்றும் பொது நலத்துக்கு கேடு விளைவிக்கும் தன்மையை கருத்தில் கொண்டு அவற்றை உற்பத்தி செய்வது. விற்பனை செய்வது மற்றும் விற்பனைக்கென வாகனங்களில் எடுத்து செல்வது அரசால் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளை உற்பத்தி செய்வதோ. வாகனங்களில் எடுத்து செல்வதோ மற்றும் விற்பனை செய்வதோ கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் கடும் குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பது இதன் முலம் அறிவிக்கப்படுவதுடன் பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள பட்டாசு வகைகளை வாங்குவது மற்றும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்த்திடுமாறு அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி பேரியத்தை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட மற்றும் சரவெடி சார்ந்த பட்டாசுகள் நமது உடல்நலம் மற்றும் பொது நலத்திற்கு கேடு விளைவிக்கும் தன்மையை கருத்தில் கொண்டு, அவற்றை உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது மற்றும் விற்பனைக்கென வாகனங்களில் எடுத்து செல்வது அரசால் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.மேற்படி தடை செய்யப்பட்டுள்ள பட்டாசுகளை உற்பத்தி செய்வதோ, வாகனங்களில் எடுத்து செல்வதோ மற்றும் விற்பனை செய்வதோ கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் கடும் குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பது இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள பட்டாசுகளை வாங்குவது மற்றும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்த்திடுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story