மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
வருகிற 14ந் தேதி நேரு பிறந்தநாளையொட்டி கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்ட அளவில் திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வருகிற 12ந் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக பேச்சுப்போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல்பரிசாக ரூ.5 ஆயிரம், 2வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதுபோல் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2து பரிசாக ரூ.3 ஆயிரம், 3வது பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மதியம் 2 மணிக்கும் நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவமாணவிகள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story