முள்ளுப்பட்டி இணைப்பு சாலை சேதமடையும் வாய்ப்பு
மத்தள ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொன்னாலம்மன்சோலை முள்ளுப்பட்டி இணைப்பு சாலை சேதமடையும் வாய்ப்பு உள்ளது.
மத்தள ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொன்னாலம்மன்சோலை முள்ளுப்பட்டி இணைப்பு சாலை சேதமடையும் வாய்ப்பு உள்ளது. எனவே தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இணைப்பு சாலை
மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற சிற்றாறுகள் பொன்னாலம்மன் கோவிலுக்கு அருகே அடிவாரப்பகுதியில் ஒன்றிணைகிறது. அங்கிருந்து மத்தள ஓடை வழியாக வந்து இறுதியில் பாலாற்றில் கலக்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் ஓடையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அந்த தண்ணீர் பொன்னலம்மன்சோலை முள்ளுப்பட்டி சாலையை கடந்து சென்றவாறு உள்ளது.இதனால் சாலையின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடையும் சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
தடுப்பு சுவர்
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டிய தளி பேரூராட்சிக்கு மத்தளஓடை முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. மழை காரணமாக ஓடைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் பொன்னாலம்மன்சோலைமுள்ளுபட்டி இணைப்பு சாலை சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி உள்ளிட்டை சரக்கு வாகனங்களை இயக்க முடியாதலால் போக்குவரத்து தடை படும் அபாயம் உள்ளது.
இந்த சாலை விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கும், சாகுபடிக்கு தேவையான இடு பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் பிரதானமாக உள்ளது. எனவே பொன்னாலம்மன்சோலை-முள்ளுப்பட்டி சாலையில் ஏற்பட்டுள்ள மண்அரிப்பை மணல் மூட்டைகள் கொண்டு உடனடியாக சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.மேலும் நிரந்தர தீர்வாக சாலையின் ஓரத்தில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்
Related Tags :
Next Story