விபத்தில்லா தீபாவளி குறித்து செயல்விளக்கம்
விபத்தில்லா தீபாவளி குறித்து செயல்விளக்கம்
ஊட்டி
தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை நிகழ்ச்சி, ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் வீரர்கள் பட்டாசு வெடிக்கும்போது நமக்கும், மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வெடிப்பது, தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மேலும் வடகிழக்கு பருவமழையை ஒட்டி மாணவர்களுக்கு பேரிடர் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story