2 பேர் கைது


2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2021 7:25 PM IST (Updated: 3 Nov 2021 7:25 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோவில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பட்டிவீரன்பட்டி:

திண்டுக்கல்-வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் பட்டிவீரன்பட்டி அருகே மரியாயிபட்டி என்ற இடத்தில், பட்டிவீரன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்தது. ஆட்டோவை நிறுத்தி, அதில் பயணம் செய்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அய்யன்கோட்டையை சேர்ந்த பிரவீன் (வயது 24), முத்துலாபுரத்தை சேர்ந்த சந்தோஷ் (22) என்று தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக தகவலை தெரிவித்தனர்.

 இதனையடுத்து ஆட்டோவை போலீசார் சோதனை செய்தனர். அதில் 2¼ கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கஞ்சா, ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். 

பட்டிவீரன்பட்டி பகுதியில் விற்பனை செய்வதற்காக, ஆட்டோவில் கஞ்சாவை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது. 
-----------

Next Story