பாதுகாப்பான முறையில் தீபாவளி பட்டாசுகள் வெடிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
பாதுகாப்பான முறையில் தீபாவளி பட்டாசுகள் வெடிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சிங்கம்புணரி,
பாதுகாப்பான முறையில் தீபாவளி பட்டாசுகள் வெடிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணி
சிங்கம்புணரி அருகே தெக்கூரில் உள்ள எஸ்.எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளி மற்றும் பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் முன்பிருந்து கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினர். தாளாளர் செந்தில் குமார், முதல்வர் ஹேமா மாலினி வாழ்த்துரை வழங்கினர்.
பேரணியை சிங்கம்புணரி போலீஸ் இ்ன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி பேரணியை தொடங்கி வைத்தார். சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் தொடங்கிய பேரணி சுமார் ஒரு கிலோமீட்டர் உள்ள சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் பேரணியில் கலந்து கொண்டு ஆதரவற்ற மக்களுக்கு இலவச ஆடைகளை வழங்கினர்.
பட்டாசுகளை வெடிப்பது மற்றும் தீபாவளியை பாது காப்பாக கொண்டாடுவது எப்படி என்பதை தீயணைப்பு நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் மாணவ-மாணவிகளுக்கு பேருந்து நிலையத்தில் செயல் விளக்கம் அளித்தனர்.
விழிப்புணர்வு
மேலும், பாதுகாப்பான தீபாவளி குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள 22 பள்ளிகளுக்கு சென்று நோட்டீஸ் வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் சிங்கம்புணரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜானகிராமன், குகன் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் குமார், பாலாஜி, சத்யராஜ், ராம்குமார் மற்றும் பிரதீஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story