குளம்போல் மாறிய கோட்டை சுற்று சாலை. வாகன ஓட்டிகள் அவதி
வேலூர் சுற்றுச்சாலை குளம்போல் மாறியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வேலூர்
வேலூர் சுற்றுச்சாலை குளம்போல் மாறியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குளமாக மாறிய சுற்றுசாலை
வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் நகர் முழுவதும் உள்ள தெருக்கள் மேடு பள்ளங்களாகி பொதுமக்கள் நடக்க முடியாத அளவுக்கு மாறிவிட்டன. வேலூர் நகரின் புகழை பறைசாற்றும் கோட்டையை சுற்றி செல்லும் சாலையும் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி ஆமை வேகத்தில் நடப்பதால் சின்னா பின்னமாகி உள்ளது.
இந்த கோட்டை சுற்று சாலைதான் வேலூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது மேடு பள்ளமாக மாறிவிட்ட நிலையில், மழை நீரும் தேங்கி குளம் போல் மாறி விட்டதால் அனைத்து வாகனங்களும் நகருக்கு உள்ளே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
வாகன ஓட்டிகள் அவதி
இதற்கு எல்லாம் மேலாக, பெங்களூரு சாலை - கோட்டை சுற்று சாலை சந்திப்பில் ஓட்டல் கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள், மற்றும் பஞ்சு கழிவுகள் கொட்டப் பட்டு துர்நாற்றம் வீசுகிறது. ஆண்டு கணக்கில் ஆமை வேகத்தில் நடக்கும் பணியின் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
கோட்டை சுற்றுசாலையும்குளம்போல் மாறியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Related Tags :
Next Story