துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக வியாபாரியிடம் ரூ.9½ லட்சம் மோசடி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக பால் வியாபாரியிடம் ரூ.9½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக பால் வியாபாரியிடம் ரூ.9½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
துறைமுகத்தில் வேலை
தூத்துக்குடி அருகே உள்ள நடுசெக்காரக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நயினார். இவருடைய மகன் பெருமாள் (வயது 36). முதுநிலை பட்டதாரியான இவர், தற்போது பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இவரிடம் தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிலுக்கன்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துக்குமார் (31) என்பவர் தனக்கு பெரிய செல்வாக்கு இருப்பதாகவும், அதை பயன்படுத்தி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுறைகத்தில் மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
ரூ.9½ லட்சம்
இதற்காக பெருமாளிடம் இருந்து ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி உள்ளார். ஆனால், பெருமாளுக்கு அவர் வேலை வாங்கி தரவில்லை. இதனால் பெருமாள், தனது பணத்தை திருப்பித்தருமாறு கேட்டு உள்ளார்.
ஆனால், முத்துக்குமார் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. எனவே, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெருமாள், இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார்.
கைது
இதுபற்றி விசாரணை நடத்த அவர், குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வனிதா ராணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அப்பாத்துரை மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில், வேலை வாங்கி தருவதாக கூறி முத்துக்குமார் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story