லத்தோரி ரெயில்வே கேட் வழியாக அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து. மேம்பாலம் கட்ட கோரிக்கை


லத்தோரி ரெயில்வே கேட் வழியாக அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து. மேம்பாலம் கட்ட கோரிக்கை
x
தினத்தந்தி 3 Nov 2021 9:59 PM IST (Updated: 3 Nov 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

லத்தோரி ரெயில்வே கேட் வழியாக நாளுக்குநாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. எனவே மேம்பாலம் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கே.வி.குப்பம்

லத்தோரி ரெயில்வே கேட் வழியாக நாளுக்குநாள் போக்குவரத்து அதிகரித்து  வருகிறது. எனவே மேம்பாலம் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து அதிகரிப்பு

கே.வி.குப்பம் தாலுகாவில் முக்கிய ஊராட்சியாக இருப்பது லத்தேரி. இங்கிருந்து காட்பாடி, வேலூர், பரதராமி, சித்தூர், குடியாத்தம், பெங்களூரு என பல்வேறு இடங்களுக்கு வாகனங்கள் செல்கின்றன. லத்தேரி பஸ் நிலையம் அருகிலேயே லத்தேரி ெரயில் நிலையம் உள்ளது. இங்கு விரைவு ெரயில்கள் நிற்பதில்லை. பயணிகள் ரெயில்கள் மட்டுமே நிற்கும்.

இதன் வழியே செல்லும் விரைவு, அதிவிரைவு உள்ளிட்ட எல்லாவித ெரயில்களும் சென்னை, ஜோலார்பேட்டை சேலம், கோயமுத்தூர், பெங்களூரு, மைசூரு என்று பல இடங்களுக்கு ரெயில்கள் செல்கின்றன. ெரயில்கள் வரும்போது ரயில்வேகேட் தினமும் அடிக்கடி மூடப்படுகிறது. ஒரு ெரயிலை தொடர்ந்து மற்றொரு ெரயில் வர சிறிது தாமதம் ஆனாலும் இரண்டு ெரயில்களும் கடந்த பிறகே ெரயில்வே கேட் திறக்கப்படுகிறது. இந்த வழியாக நாளுக்குநாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இருபுறமும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அடிக்கடி நடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேம்பாலம் 

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் இந்தப்பகுதியில் மேம்பாலம் கட்டுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த பணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று வடுகந்தாங்கலுக்கு மாற்றப்பட்டு அங்கு ெரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. இனியாவது இங்கு ெரயில்வே மேம்பாலம் கட்டினால் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. 

இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story