ராணிப்பேட்டையில் மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை நகராட்சியில் மழை வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கக்கூடிய இடமாக கண்டறியப்பட்டுள்ள சீனிவாசன் பேட்டை பகுதியில் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள மக்களிடமும், அதிகாரிகளிடமும் அங்கு ஏற்கனவே ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மழை வெள்ளத்தின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி, வாலாஜா தாசில்தார் ஆனந்தன், ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story