கந்தர்வகோட்டையை சேர்ந்தவரிடம் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி ஒருவர் கைது


கந்தர்வகோட்டையை சேர்ந்தவரிடம்  மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி ஒருவர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2021 10:27 PM IST (Updated: 3 Nov 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

கந்தர்வகோட்டையை சேர்ந்தவரிடம் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை:
மோசடி 
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 60). இவரது மகன் சசிதரனுக்கு மத்திய அரசு துறையில், என்ஜினீயர் வேலை வாங்கி வருவதாக தஞ்சாவூரை சேர்ந்த மெல்வின் ஜெயக்குமார் (50), அவரது மனைவி சுஜாதா (47) ஆகியோர் செல்லப்பனிடம் தெரிவித்து ரூ.10 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால் பணத்தை பெற்ற பின் வேலைக்கு ஏற்பாடு செய்யாமல் இருந்துள்ளனர். இதனால் அவர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். இதில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை செல்லப்பனிடம் அந்த தம்பதியினர் கொடுத்தனர். மீதிப்பணத்தை அவர் கேட்ட போது அவர்கள் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். 
ஒருவர் கைது 
இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் செல்லப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் மெல்வின் ஜெயக்குமார், சுஜாதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மெல்வின் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story