வேலூர் மாவட்டத்தில் புதிதாக திருமணமான போலீசாருக்கு 3 நாட்கள் தீபாவளி விடுமுறை


வேலூர் மாவட்டத்தில் புதிதாக திருமணமான போலீசாருக்கு 3 நாட்கள் தீபாவளி விடுமுறை
x
தினத்தந்தி 3 Nov 2021 10:29 PM IST (Updated: 3 Nov 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக திருமணமான போலீசாருக்கு 3 நாட்கள் தீபாவளி விடுமுறை

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட காவல்துறையில் புதிதாக திருமணம் முடிந்த போலீசார் பண்டிகையை கொண்டாட அவர்களுக்கு விடுமுறை வழங்க போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் முடிவு செய்தார். அதன்படி பயிற்சி பெறும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 29 போலீசார் என 31 பேருக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சூப்பிரண்டு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story