நீட் தேர்வில் 95 மாணவ- மாணவிகள் தேர்ச்சி


நீட் தேர்வில் 95 மாணவ- மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 3 Nov 2021 10:31 PM IST (Updated: 3 Nov 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் நீட்தேர்வில் 95 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் கடந்த 1-ந் தேதி வெளியானது.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இருந்து மொத்தம் 114 மாணவர்கள், 302 மாணவிகள் என மொத்தம் 416 மாணவ- மாணவிகள் நீட் தேர்வை எழுதினர். இவர்களில் 26 மாணவர்கள், 69 மாணவிகள் என 95 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
அரசு பள்ளி அளவில் நீட் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளில் விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்திகா 437 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தையும், விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் உதயகுமார் 303 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், மாணவி மோகசினாபானு 295 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இதேபோல் அரசு நிதி உதவி பெறும் பள்ளி அளவில் விழுப்புரத்தை சேர்ந்த தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மாணவி ரம்யாபாரதி 409 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவி திவ்யதர்ஷினி 370 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், மாணவி சவுந்தர்யா 324 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

Next Story