திருவண்ணாமலையில் விடிய, விடிய மழை
திருவண்ணாமலையில் விடிய, விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 30 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகின்றது.
திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று அதிகாலை வரை விடிய, விடிய மிதமான மழை பெய்தது. தொடர்ந்து பகலில் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது.
இதில், அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வந்தவாசி-25, கலசபாக்கம்-22, செய்யாறு-20, செங்கம்-19.8, சேத்துப்பட்டு-17, போளூர்-15.2, ஜமுனாமரத்தூர்-14, வெம்பாக்கம்-13, கீழ்பென்னாத்தூர்-12.4, ஆரணி-9.5.
Related Tags :
Next Story