கரூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை


கரூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை
x
தினத்தந்தி 3 Nov 2021 10:46 PM IST (Updated: 3 Nov 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி கரூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

கரூர், 
பூ மார்க்கெட்
கரூர் ரெயில்வே ஜங்ஷன் ரோடு பகுதியில் கரூர் பூ மார்க்கெட் வளாகம் உள்ளது. பூக்களை விவசாயிகள் நேரடியாக கொண்டு வந்து ஏலம் மூலம் விற்று செல்கின்றனர். மேலும் திண்டுக்கல் உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்தும் கூட ஏலத்திற்காக பூக்கள் கொண்டு வரப்படுகிறது. பெரும்பாலும் மல்லிகை, முல்லை, அரளி, ஜாதிப்பூ உள்ளிட்ட பூக்களை இங்கிருந்து வியாபாரிகள், பூக்கட்டும் பெண்கள் உள்ளிட்டோர் வாங்கி செல்கின்றனர்.
தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருப்பதால், இறைவழிபாட்டில் பூக்களின் தேவை பிரதானமாக இருக்கும். அந்த வகையில் தங்களுக்கு தேவையான பூக்களை ஏலம் மூலம் வாங்கி செல்ல பூ கட்டி விற்கும் பெண்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நேற்று காலை முதலே கரூர் பூ மார்க்கெட்டில் குவிந்தனர். இதனால் பூக்களின் விற்பனை படுஜோராக நடந்தது. பின்னர் அவர்கள், தங்களுக்கு தேவையான பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
பூக்கள் விலை விவரம்
கரூர் பூமார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட பூக்களின் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:- மல்லிகை ரூ.2,000-க்கும், முல்லை ரூ.1,000-க்கும், ஜாதிப்பூ ரூ.800-க்கும், ரோஜாப்பூ ரூ.150-க்கும், செவந்தி பூ ரூ.60 முதல் ரூ.70-க்கும், அரளிப்பூ ரூ.200-க்கும், சம்மங்கி ரூ.100-க்கும், கோழிக்கொண்டை ரூ.20-க்கும், மருவு 4 கட்டு ரூ.80 முதல் ரூ.100-க்கும், துளசி 4 கட்டு ரூ.60-க்கும் விற்பனையானது. மேலும் வியாபாரிகள் உள்ளிட்டோர் இங்கிருந்து பூக்களை வாங்கி சென்று கோர்த்து விற்கும் போது அவற்றின் விலை இன்னும் அதிகரிக்கலாம்.
இதுகுறித்து பூ மார்க்கெட் தலைவர் கே.சி.பி. முருகேசன் கூறுகையில், தொடர் மழையின் காரணமாக மல்லிகை மற்றும் முல்லை பூ வரத்து குறைவாக உள்ளது. மேலும், பண்டிகை காலம் என்பதால் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது என கூறினார்.

Next Story