புதுப்பேட்டை, நடுவீரப்பட்டு பகுதியில் பஸ்களின் கண்ணாடி உடைத்த 13 பேர் கைது
புதுப்பேட்டை, நடுவீரப்பட்டு பகுதியில் பஸ்களின் கண்ணாடி உடைத்த 13 பேர் கைது செய்யப்பட்டனா்.
புதுப்பேட்டை,
நெல்லிக்குப்பம் அடுத்த திருமாணிக்குழி பல்லவராயநத்தம் தொட்டி மற்றும் குமளங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று 3 அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்கினர்.
இதில் பஸ்களின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள் ஜோதி (வயது 29), சேதுபதி (23), கலியபெருமாள் (33), முத்துக்குமரன் (37), மூர்த்தி (38), பாலாஜி (37), ரத்தினவேல் (42), தட்சிணாமூர்த்தி (42), ராஜசேகர் (32), நந்தகுமார் (27) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் புதுப்பேட்டை அருகே உள்ள ஒறையூர் பகுதியில் அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைத்ததாக ஒறையூர் கிராமத்தை சேர்ந்த அய்யனார் மகன் ராமு (21), மாணிக்கம் (42), குணசேகரன் (45) ஆகியோரை புதுப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story