அரசு பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்


அரசு பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2021 11:06 PM IST (Updated: 3 Nov 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் அரசு பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

தேனி: 

தேனி மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் ஆண்டிப்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோவில் அருகில் உள்ள அரசு பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வர்த்தகர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். 

விழாவில் ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தாடைகள், இனிப்பு ஆகியவற்றை வழங்கினார். இதில் வர்த்தகர் காங்கிரஸ் மற்றும் காமராஜர் நற்பணி இயக்க நிர்வாகிகள் மனோகரன், ஆரோக்கியராஜ், மெல்வின், கண்ணுச்சாமி, கணேஷ் மிஸ்ரா, காந்திராஜன், ராஜேந்திரபிரசாத் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story