கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு


கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 3 Nov 2021 11:11 PM IST (Updated: 3 Nov 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கூடலூர்: 


தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. தற்போது இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில் நேற்று பகல் 12 மணி வரை 3 மதகுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரத்து 986 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருவதால் பகல் 12 மணிக்கு பிறகு மேலும் 2 மதகுகள் வழியாக வினாடிக்கு 3,981 கனஅடி வீதம் கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 138.95 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 83 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 305 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. 


Next Story