ஆம்னி பஸ் மோதி முதியவர் பலி


ஆம்னி பஸ் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 3 Nov 2021 11:28 PM IST (Updated: 3 Nov 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

ஆம்னி பஸ் மோதி முதியவர் பலியானார்

ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்துள்ள அருளானந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியசாமி (வயது 70). கூலித்தொழிலாளி. இவர் சொந்த வேலையாக சைக்கிளில் ஆண்டிமடம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அருளானந்தபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் ஆம்னி பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் போகும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆம்னி பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story