‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Nov 2021 11:44 PM IST (Updated: 3 Nov 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வாகன ஓட்டிகள் அவதி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா மருவத்தூர் கிராமத்தில் காலனி தெருவிற்கு செல்லும் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல முடியாமல் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும், முதியவர்கள் இந்த சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
ராயப்பன், மருவத்தூர், பெரம்பலூர்.
சேறும், சகதியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கத்தலூர் பஞ்சாயத்து ரோட்டாத்துப்பட்டியில் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணன், புதுக்கோட்டை.
திருச்சி செந்தண்ணீர் புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மழை நீர் தேங்கி இருப்பதால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் நடக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் செந்தண்ணீர்புரம் பள்ளியை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபா, திருச்சி.
திருச்சி கிழக்கு தொகுதி 35-வது வார்டு ஏர்போர்ட் ஜே.கே. நகர், ரோஜா தெரு சாலைகள் மிகவும் மோசமான நிலையில், சேறும் சகதியுமாக உள்ளது. இங்கு தேங்கியிருக்கும் தண்ணீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இச்சாலையை சீரமைக்க வேண்டும்.
மணிகண்டன், ஜே.கே.நகர், திருச்சி.
திருச்சி மாநகர் 41-வது வார்டு கிருஷ்ணமூர்த்தி நகர் விஸ்தரிப்பு பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை நீர் தேங்கி நிற்கிறது. மக்கள் வெளியே வரமுடியாத நிலையில் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரதி, கிருஷ்ணமூர்த்தி நகர், திருச்சி.
பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஏழூர்பட்டி பஸ்நிலையம் முன்பு திருச்சி-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனகராஜ், திருச்சி.
கொசு மருந்து அடிக்க வேண்டும்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா சோமரசம்பேட்டை ஊராட்சி வாசன் நகரில் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில்  கொசுமருந்து அடிக்க வேண்டும்.
வீரமணி, சோமரசம்பேட்டை, திருச்சி.
காட்சிப்பொருளான நீர்த்தேக்க தொட்டி
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா மதுராபுரி ஊராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் தெருவில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. ஆனால் இது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அரசுபணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உரிய முறையில் பராமரித்து தண்ணீர் தேக்கி பொதுமக்கள் பயன் பெற ஆவண செய்ய வேண்டும்.
சுகுமாரன், திருச்சி.
சாய்ந்து விழும் நிலையில் டெலிபோன் கம்பம்
திருச்சி மாவட்டம், அரியமங்கலம், 14-வது வார்டு, தஞ்சை மெயின் ரோட்டில், கிருஷ்ணாபுரம் ரோடு செல்லும் சாலையில் உள்ள டெலிபோன் கம்பம் சேதம் அடைந்து எப்போது வேண்டும் என்றாலும் கீழே சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த டெலிபோன் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சையது முஸ்தபா, பூக்கொல்லை தெரு, திருச்சி.

Next Story