மாவட்ட செய்திகள்

கார் தீப்பிடித்து எரிந்து நாசம் + "||" + Car

கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

கார் தீப்பிடித்து எரிந்து நாசம்
திருச்சியில் அதிகாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி, நவ.4-
திருச்சியில் அதிகாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
கார் தீப்பிடித்தது
திருச்சி உறையூர் பாத்திமா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). இவர் காரில் துணி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களாக வீட்டின் அருகே காரை நிறுத்தி இருந்தார். நேற்று அதிகாலை காரை அவர் எடுப்பதற்காக ஸ்டார்ட் செய்தார். அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார், காரில் இருந்து இறங்கி அங்கிருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார்.

முற்றிலும் எரிந்து நாசம்
இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில் பேட்டரியில் மின்கசிவு காரணமாக கார் தீப்பிடித்தது தெரியவந்தது. காரில் எப்போது அவர் விற்பனைக்காக துணிகள் வைத்திருப்பார். ஆனால் நேற்று காரில் துணிகள் ஏதும் இல்லை. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு நடத்தி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கார், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களா?
கார், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களா
2. மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்தது
கடலூர் முதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்தது
3. ஈரோட்டில் கார் திருடர்கள் 2 பேர் கைது
ஈரோட்டில் வாகன சோதனையின் போது கார் திருடர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. மணப்பாறை அருகே நள்ளிரவில் குளத்திற்குள் பாய்ந்த கார்
மணப்பாறை அருகே நள்ளிரவில் குளத்திற்குள் கார் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
5. சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்தது
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்தது விபத்துக்குள்ளானது.