கொட்டும் மழையில் பொருட்கள் வாங்க கடைவீதியில் குவிந்த பொதுமக்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொட்டும் மழையில் பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர். ஒரே நேரத்தில் வாகனங்கள் அணிவகுத்து வந்ததால் போக்குவரத்து நெரிசலால் திருச்சி மாநகரம் திணறியது.
திருச்சி, நவ.4-

தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே திருச்சி மக்களின் நினைவுக்கு வருவது திருச்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை என்ற என்.எஸ்.பி. ரோடுதான். இங்கு திருச்சி மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புத்தாடைகள், ஆபரணங்கள், பர்னிச்சர், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்க குவிந்துவிடுவார்கள்.இந்த ஆண்டு கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததாலும், கொரோனா காரணமாகவும் பலர் தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதை சற்று தள்ளிப்போட்டு வந்தனர். இன்று தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் நேற்று முன்தினம் வரை கடைவீதியில் விற்பனை சுமாராகவே இருந்துவந்தது. நேற்று இரவு முதலே திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. இந்த மழை காலை 11 மணி வரை நீடித்தது.
கொட்டும் மழை
இந்தநிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பல்வேறு ஊர்களில் இருந்தும் பொருட்கள் மற்றும் ஜவுளிகள் வாங்க நேற்று திருச்சியை நோக்கி பொதுமக்கள் வாகனங்களில் படையெடுத்தனர். இதன் காரணமாக திருச்சி என்.எஸ்.பி. சாலை, பெரியகடை வீதி, சின்னக்கடைவீதி, சிங்காரத்தோப்பு, சூப்பர் பஜார், மேல அரண்சாலை, காந்திமார்க்கெட் ஆகிய இடங்கள் நேற்று மக்கள் கூட்டத்தால் திணறியது. இந்த கூட்டம் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.கடைவீதியில் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கார்கள், ஆட்டோக்கள், வேன்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் வந்ததால், மாநகர சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறியது. குறிப்பாக பாலக்கரை, மதுரை சாலை, மெயின்கார்டு கேட், உறையூர் மெயின்ரோடு, சத்திரம் பஸ்நிலையம், காந்திமார்க்கெட், தஞ்சாவூர் சாலை, தில்லைநகர், சாஸ்திரி ரோடு, மாம்பலசாலை, அண்ணாசிலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஊர்வலம் போல ஊர்ந்து சென்றன. இந்த நெருக்கடியில் சிக்கிய வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து தான் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காலை 11 மணியிலிருந்து மதியம் வரை இந்த நிலை நீடித்தது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடிய போலீசாரால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.
தற்காலிக பஸ்நிலையங்கள்
அதே நேரத்தில் தீபாவளிக்காக வில்லியம் சாலையில் சோனா மீனா தியேட்டர் எதிர்புறம், மன்னார் புறத்தில் இரண்டு இடங்கள் என 3 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டதால் பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்கள் இந்த இடங்களில் இருந்து புறப்பட்டன. இந்த இடங்களில் இருந்து மத்திய பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ்கள் வந்தன.
மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் கரூர், நாமக்கல் மார்க்கத்தில் செல்லும் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதன் காரணமாக மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. சென்னை செல்லும் பஸ்களிலும் பயணிகள் மிகக் குறைவான அளவிலேயே இருந்தனர். அதே நேரத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பின. இதுபோல் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் ரெயில் வரும் நேரங்களில் நேற்று பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
திருச்சி என்.எஸ்.பி.சாலை உள்ளிட்ட கடைவீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தும் போலீசார் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணித்து வந்தனர். டிரோன் கேமராவும் பயன்படுத்தப்பட்டது.
சமயபுரம்-மணப்பாறை
இதேபோல் சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதிகளில் மழையையும் பொருட்படுத்தாமல் கடைவீதிகளில் பொதுமக்கள் ஆர்வமாக பொருட்கள் வாங்கி சென்றனர். சமயபுரம் கடைவீதி, நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இதேபோல் மணப்பாறை, துறையூர், தொட்டியம், முசிறி, கல்லக்குடி, லால்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டன.

Related Tags :
Next Story