மோட்டார் சைக்கிளை பறித்து சென்றவர் கைது
மோட்டார் சைக்கிளை பறித்து சென்றவர் கைது
மலைக்கோட்டை, நவ.4-
திருச்சி துவாக்குடி பெல்நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 63). ஓய்வு பெற்ற போலீஸ்காரரான இவர் சம்பவத்தன்று காலை திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அருகே கலைஞர் அறிவாலயம் பகுதியில் சிக்னலை மீறி சென்றதாக தெரிகிறது. அப்போது, அங்கு சாதாரண உடையில் நின்ற நபர், தான் போலீஸ்காரர் என்றும், போக்குவரத்து விதியை மீறியதற்காக மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்வதாகவும், காலையில் கோட்டை போலீஸ் நிலையத்தில் அபராதத்தை செலுத்தி மோட்டார் சைக்கிளை பெற்று செல்லும்படி கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றுவிட்டார். நேற்று முன்தினம் காலை அவர் கோட்டை போலீஸ்நிலையத்துக்கு சென்று விசாரித்த போது, மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்யவில்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். விசாரணையில் மோட்டார் சைக்கிளை பறித்துச்சென்றது. உறையூர் செபஸ்தியார் கோவில் வீதியை சேர்ந்த கார்த்திக் (40) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.

Related Tags :
Next Story