தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலை வசதி வேண்டும்
தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் சாலையில் பொன்னுசாமி நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக மண்சாலையாகவே உள்ளது. தற்போது மழை பெய்துள்ளதால் சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இதேபகுதியில் குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டிவிடுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி ஏற்படுத்தி குப்பை தொட்டி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-பொதுமக்கள், பொன்னுசாமிநகர், தஞ்சாவூர்.
Related Tags :
Next Story