விபத்துகளை ஏற்படுத்தும் வேகத்தடைகளை சீரமைக்க நடவடிக்கை
விருதுநகரில் விபத்துகளை தவிர்ப்பதற்காக சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் சிதிலமடைந்து விபத்துக்களை ஏற்படுத்தும் நிலை உள்ளதால் நகராட்சி நிர்வாகம் வேகத்தடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகரில் விபத்துகளை தவிர்ப்பதற்காக சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் சிதிலமடைந்து விபத்துக்களை ஏற்படுத்தும் நிலை உள்ளதால் நகராட்சி நிர்வாகம் வேகத்தடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேகத்தடை
பொதுவாக வாகனப்போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் விபத்துகளை தவிர்ப்பதற்காக வேகத்தடைகள் அமைப்பது வழக்கம்.
விருதுநகரில் ெரயில் நிலையத்துக்கு செல்லும் பிரதான சாலையான ெரயில்வே பீடர் ரோட்டில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் தந்தி மரத்தெரு சந்திப்பு அருகிலும், ராமமூர்த்தி ரோடு சந்திப்பு அருகிலும் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடைகள் அமைக்கப்படும்போது அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால் வேகத்தடைகள் அதிக உயரமாக அமைக்கப்படுகிறது.
வாகன போக்குவரத்து
இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது விபத்துகளை சந்திக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் விருதுநகர் ெரயில்வே பீடர் ரோட்டில் ெரயில் நிலையத்திற்கு செல்லும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளதால் வேகத்தடைகள் உள்ள பகுதிகள் விபத்து பகுதியாகவே மாறிவிட்டது. விபத்துகளை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் விபத்துக்களை ஏற்படுத்தும் பகுதிகளாக மாறிவிட்டது.
வேகத்தடை அதிக உயரம் உள்ளதால் இதில் வாகனங்கள் ஏறி இறங்கும் நிலையில் வேகத்தடையை ஒட்டி சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
அவசியம்
அதிலும் மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் பொழுது வாகன ஓட்டிகளுக்கு தெரிய வாய்ப்பில்லாத நிலையில் அவர்கள் பள்ளத்தில் ஏறி இறங்கும் போது தடுமாறி கீழே விழும் நிலை தொடர்கிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து நகரின் பிரதான சாலையான ெரயில்வே பீடர் ரோட்டில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் வேகத்தடை பகுதிகளை சீரமைத்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் இடங்களில் வேகத்தடை அமைத்தும் விபத்துகளை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
Related Tags :
Next Story